புதிய விண்கல் பொழிவை காணும் வாய்ப்பை நாளை பெறும் உலக மக்கள்!!

993

Vinkal

புதிய விண்கல் பொழிவு ஒன்றை கண்டு களிக்கும் வாய்ப்பு நாளைய (24.05) தினம் உலகவாசிகளுக்கு கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழக பூகோலவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை நேரப்படி நாளை பகல் 1 மணிக்கு விண்கல் பொழிவு இடம்பெறவுள்ளதாகவும் அதனை இலங்கை வாழ் மக்கள் கண்டுகளிப்பது கடினம் என்ற போதும் அமெரிக்கா மற்றும் கனேடிய வாழ் மக்கள் நன்கு அவதானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

´கெமலோபாடலிடிஸ்´ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் பொழிவு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என கொழும்பு பல்கலைக்கழக பூகோலவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.