வவுனியா ஓமந்தையில் காணியற்ற 219 அரச ஊழியர்களுக்கு காணிகள் : வெளியான பெயர்ப்பட்டியல்!!

2903

வவுனியாவில் பணியாற்றும் காணியற்ற அரச ஊழியர்களுக்கு ஒமந்தை கிராம அலுவலக பிரிவில் உள்ள அரச ஊழியர் குடியேற்ற திட்டத்தில் அரச காணியினை வழங்குவதற்கு நேர்முக தேர்வின் மூலம் 219 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த தெரிவு செய்யப்பட்ட அரச ஊழியர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் இவர்களுள் அரச காணியினை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பின்,

அவர்கள் தொடர்பில் எதிர்வரும் 24.03.2023 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகத்திற்கு வருகை மேற்கொண்டு அல்லது பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் , வவுனியா எனும் முகவரிக்கு தபால் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுள்ளார்.



மேலும் 24.03.2023ம் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் எவ்வித முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டாது என்பதுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தொடர்பில் முன்னரே தகவலை வழங்குமாறு பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.