நடு வீதியில் தீப்பிடித்த கார்… நிறைமாத கர்ப்பிணியும் மற்றும் கணவருக்கும் நேர்ந்த பரிதாபம்!!

384

கேரளாவில்..

மருத்துவ பரிசோதனைக்காக நிறைமாத கர்ப்பிணியை காரில் அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார் கணவர். கூட அவரது மகள், தாய்,தந்தை, உறவுக்கார பெண் சென்று இருக்கிறார்கள்.

திடீரென்று நடுரோட்டில் காரில் தீப்பிடிக்க பின் சீட்டில் அமர்ந்திருந்த 4 பேரும் கதவை திறந்து கொண்டு வெளியேறிவிட முன் சீட்டில் அமர்ந்திருந்த கணவரும் நிறைமாத கர்ப்பிணியும் கதவு திறக்க முடியாததால் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டு உட்கார்ந்த நிலையிலேயே தீயில் கருகி உயிரிழந்திருக்கிறார்கள்.

கேரளாவில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம். கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரஜித். இவரின் மனைவி ரிஷா . தம்பதிக்கு பார்வதி என்ற மகள் உள்ளார். ரிஷா மீண்டும் தற்போது கர்ப்பம் அடைந்து நிறை மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

மருத்துவர் பரிசோதனைக்காக நிறைமாத கர்ப்பிணி ரிஷாவை காரில் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார் பிரஜித். கூடவே அவரது மகளும், தாய் ,தந்தையும் , உறவுக்கார பெண்ணும் சென்று இருக்கிறார்கள்.

மகள், தாய், தந்தை,உறவுக்கார பெண் நான்கு பேரும் பின் காரின் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள, முன் சீட்டில் மனைவியை அமரவைத்து காரை ஓட்டி இருக்கிறார் பிரஜித். கண்ணூர் அரசு மருத்துவமனை அருகே கார் சென்றபோது நடுரோட்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்து இருக்கிறது.

அதிர்ச்சி அடைந்த பிரஜித் உடனே காரை நிறுத்தி இருக்கிறார். ஆனால் முன்பக்கத்தில் இருந்த இரண்டு கதவும் திறக்க முடியவில்லை. இதனால் பிரஜீத், ரிஷா இரண்டு பக்கமும் கதவுகள் திறக்க முடியவில்லை. ஆனால் பின் சீட்டில் இருந்த கதவை திறந்து கொண்டு நான்கு பேரும் தப்பித்து வெளியேறி விட்டார்கள்.

நாலு பேரும் தப்பித்து வெளியேறி விட்டார்கள். முன் சீட்டில் அமர்ந்திருந்தபடியே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள் பிரஜித்தும் ரிஷாவும். எப்படியாவது காப்பாற்றலாம் என்று முயற்சித்து இருக்கிறார்கள் . ஆனால் தீ வேகமாக பரவி விட்டதால் ரெண்டு பேரும் தீயில் கருகி விட்டனர்.

ஓடும் காரில் திடீரென்று தீப்பற்றியது எப்படி என்று விசாரணை நடந்த போது காருக்குள் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. அந்த பாட்டிலில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்திருக்கிறது.

மேலும், காரின் பின்பக்க கேமரா பொருத்தப்பட்ட போது டிரைவர் சீட்டில் உள்ள ஒயர்களின் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது என்று மோட்டார் வாகனத் துறை தெரிவித்திருக்கிறது.