
வயது கூடிய பெண்ணை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் மற்றும் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த ஊமை மகனுக்கு காலி மேல் நீதிமன்றம் 24 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இரண்டு குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு தலா 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை விதித்த நீதிபதி கே.பி.கே. ஹிம்புரேகம இரண்டு குற்றங்களுக்காக தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராத தொகையை செலுத்த தவறினால், தலா ஆறு மாதங்கள் மேலும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
சைகை மொழி பெயர்ப்பாளர் ஊடாக குற்றத்தை ஒப்பு கொள்வதாக குற்றவாளி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஏற்கனவே குற்றவாளி 13 வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வந்துள்ளார். இதனையும் கொலை சம்பவம் தொடர்பான விடயத்தை கவனத்தில் எடுத்து கொண்ட நீதிபதி, தண்டனை காலம் ஓரே தடவையில் கழியும் வகையில் தீர்ப்பை கூறியுள்ளார்.
ரஞ்சித் சில்வா என்ற இந்த குற்றவாளி, 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி ரத்கம கடேவத்தை என்ற பகுதியில் வைத்து தனது பெற்றோரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.





