நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் சூதாட்டம் : கவாஸ்கர் பரபரப்புத் தகவல்!!

431

Gavaskar

நடப்பு ஐ.பி.எல் போட்டியில் 2 வீரர்களை சூதாட்டத்துக்கு இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்று இடைக்கால தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் சூதாட்டங்கள் களைகட்டுவது இயல்பாக நடந்து வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியிலும், அவை எட்டிப்பார்க்க முயற்சித்துள்ளன.

அதன்படி 2 வீரர்களை தரகர்கள் சூதாட்டத்துக்கு இழுக்கும் நோக்கில் அனுகியதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு ஐபிஎல் தொடரின் இடைக்கால தலைவர் சுனில் கவாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் வீரர்கள் யார் என்பதை வெளியிட அவர் மறுத்து விட்டார்.