சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஆட்டோ சாரதி கைது!!

549

Arrest

அம்பாறையில் 15 வயது சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, சுற்றித் திரிந்த சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது..

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி இன்று காலை பாடசாலையில் விசேட வகுப்புக்கு, அதே பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியுடன் சென்றுள்ளார்.

குறித்த முச்சக்கரவண்டி பனங்காடு மயானப் பகுதியில் நீண்டநேரம் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றி திரிந்த நிலையில், அப்பகுதி முச்சக்கரவண்டி சாரதிகள் இது தொடர்பாக பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேச தம்பட்டை கடற்கரைப் பகுதிக்கு சென்ற சந்தேகநபர், அங்குவைத்து சிறுமியை துஸ்பிரயோகம் செய்யமுற்பட்டபோது, பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை அந்த சாரதி சிறுமியின் தூரத்து உறவினர் எனவும், அவர் கடந்த சில மாதங்களாக சிறுமியின் பெற்றோருக்குத் தெரியாமல் அவரை முச்சக்கர வண்டியில் அடிக்கடி ஏற்றிகொண்டு சென்றுள்ளதாகவும் அவ்வாறே திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்திற்கு சென்றபோது பிடிப்பட்டுள்ளார் எனவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.