நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் மோதல்!!

776

Fight

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (24.05) மாலை இந்த மோதல் ஏற்பட்டுள்ள அதேவேளை மோதல் காரணமாக மேலும் பல மாணவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினரால் மோதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மோதல் குறித்து விசாரணை மேற்கொள்வதாக பல்கலைக்கழக உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதல் தொடர்பில் மாணவர்கள் சிலரால் மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.