வவுனியாவில் கணவனைத் தாக்கிவிட்டு மனைவியின் நகைகள் கொள்ளை!!

541

kollaiவவுனியா வடக்கு நயினாமடு பகுதி வீடொன்றில் நேற்று (24.05) இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் கூறியதாவது,

நயினாமடுவில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவு வேளையில் வந்த சிலர், வீட்டு உரிமையாளரின் பெயரைக்கூறி அழைத்துள்ளனர்.

இதனையடுத்து வெளியில் வந்து பார்த்தபோது, அவர் மீது கூரிய ஆயுதத்தால் வெட்டியதோடு, அவரின் மனைவியின் கழுத்தில் இருந்த இரண்டரைப்பவுண் சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவத்தில் த.செல்வராசா என்பவரே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.