
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 157 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட் – ரிவர்ஸைட் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதன்படி களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை சார்பில் திலகரத்ன டில்ஷான் 88 ஓட்டங்கயும், ப்ரியஞ்சன் 43 ஓட்டங்களையும், குமார் சங்ககார 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 26.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பாக சுசித்திர சேனநாயக்க 13 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும், நுவான் குலசேகர 15 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர். இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக 88 ஓட்டங்களைப் பெற்ற டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் 28ம் திகதி நடைபெறவுள்ளது.





