பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. காதல் திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

2608

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயது ஜெகன். இவர் மிகவும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

சரண்யாவின் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இன்று பிற்பகல் ஜெகன் கே.ஆர்.பி. அணை அருகே பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சராமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணையில் ஜெகனை பெண் வீட்டார் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெகனை அவரின் மனைவி சரண்யாவின் தந்தையின் உறவினர்கள் வழிமறித்து நடுரோட்டில் வெட்டி கொலை செய்தனர்.

சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு கத்தியுடன் அவர்கள் நடந்து செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் மக்கள் முன் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏ ற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் ஜெகனின் மாமனார் இந்த கொலைக்கு பொறுப்பேற்று மருமகனை கொலை செய்த குற்றத்திற்காக காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.