இன்ஸ்டாகிராம் நண்பனை நேரில் பார்க்க சென்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

1068

பீகாரில்..

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தின் தோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிதீஷ் குமார். இவருக்கும் அண்டை மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் 6 மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவரும் ஆன்லைன் மூலம் பேசத் தொடங்கி நட்பாக பழகியுள்ளனர்.

பின்னர் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு நிதீஷ் குமாரிடம் சிறுமி அடிக்கடி பேசத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் காதலிக்கும் மனநிலைக்கு இருவரும் சென்றுவிட்டனர். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி இருவரும் தனியாக நேரில் சந்திக்கலாம் என முடிவு செய்தனர்.

இதற்காக சிறுமியும் தனது பெற்றோரிடம், தோழியை பார்க்க செல்வதாகக் கூறிவிட்டு நிதீஷ் குமாரை பார்க்க அவரது ஊருக்கு பயணம் மேற்கொண்டார். இருவரும் பேசி முடிவு செய்த இடத்துக்கு முன்னதாகவே, நிதீஷ் குமார் தனது உறவினர் சதாசிவ் மற்றும் நண்பர் விகாஸ் குமார் ஆகியோரும் சென்றுவிட்டார்.

அங்கு வந்த சிறுமியிடம் நயமாக பேசி தனியாக ஒரு இடத்திற்கு மூவரும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு சென்று நடந்த உண்மையை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, தோரியா காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் இந்த கொடூரத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.