கடலூரில்..

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கம்பளி மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்குரு. இவர், கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், மதிய நேரத்தில் தனது நண்பர்கள் 5 பேருடன் அப்பகுதியில் உள்ள, திருச்சோபுரம் உப்பனாற்றில் சத்குரு குளிக்கச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர்கள் அனைவரும் தண்ணீரில் குதித்து உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சத்குரு தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் காப்பற்ற ஓடிவந்தனர். அதன்படி சத்குருவை காப்பாற்ற நண்பர்கள், அப்பகுதியினர் போராடியும் பலன் கிடைக்கவில்லை.

நீரில் மூழ்கி இறந்த நிலையில் அவருடன் சென்றவர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டுள்ளனர். இது குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உடல் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





