சார்ஜா பகுதி கடலில் மூழ்கி இலங்கை இளைஞன் பலி!!

698

Pali

சார்ஜா பகுதி கடற்பரப்பில் நீராடச் சென்ற இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சார்ஜா தகவல்கள் தெரிவிக்கின்றன.

கான் பகுதியில் இருந்து பொலிஸார் குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரினால் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டிருந்த கடல் பிரதேசத்திலேயே இலங்கையர் நீராடச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 23 வயதுடைய இலங்கை இளைஞன் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.