வாலு படப்பிடிப்பிற்கு பயில்வானோடு வந்த ஹன்சிகா!!

428

Hansika

வாலு படப்பிடிப்பில் ஆரம்பித்தது சிம்பு ஹன்சிகா காதல், அப்படம் முடியும் முன்னே அவர்களது காதலும் முடிந்தும் விட்டது. சமீபத்தில் வாலு படத்தின் பாடல் காட்சி ஒன்றை படம் பிடிக்க சிம்புவும் ஹன்சிகாவும் வெளிநாடு சென்றிருந்தனர்.

எப்போதுமே படப்பிடிப்பிற்கு ஹன்சிகாவோடு அவர் அம்மா செல்வது வழக்கம் ஆனால் இத்தருணம் வழக்கத்தின் மாறாக படப்பிடிப்பிற்கு ஹன்சிகாவோடு அவர் அண்ணனையும், நண்பர் என்ற பெயரில் ஒரு பயில்வானையும் அனுப்பிவைத்திருந்தாராம் அவர் அம்மா.

பிரிந்த காதலை இந்த படப்பிடிப்பில் ஒட்ட வைத்து விடலாம் என்றிருந்த சிம்புக்கு இது ஷாக்கான ஒரு விஷயம் தான்.மேலும் படப்பிடிப்பில் ஹன்சிகாவை அவர் அண்ணனும் பயில்வானும் பாதுகாப்பாக கண்காணிக்க, பின் பத்திரமாக சென்னை திரும்பியிருக்கிறார் ஹன்சிகா.