பெண்கள் பெயரை கேட்டதும் ஆர்யா விழுந்தடித்து ஓடக் காரணம் என்ன?

432

Aarya

கோடம்பாக்கத்தை பொறுத்தவரை ஆர்யா என்றாலே பிக்கப் நடிகர் என்ற முத்திரை அழுத்தமாக பதிந்து விட்டது. ஆரம்பத்தில் திரைமறைவில் இருந்த இந்த ரகசியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததால், சில நடிகர்களே ஆர்யாவின் இந்த செயலை சினிமா மேடைகளிலேயே போட்டு உடைத்தனர். இதனால் ஆர்யாவின் லீலைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

விளைவு ஆர்யாவிடம் சும்மா பேசினாலே தங்கள் மீது தப்பான இமேஜ் உருவாகி விடும் என்று சில மேல்தட்டு நடிகைகள் அவரைக்கண்டாலே தெறித்து ஓடினர். இதனால் அவ்வப்போது சிக்கும் நடிகைகளை தனது பிரியாணி கடைக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பிரியாணி ஊட்டி மகிழும் ஆர்யா, எந்த நடிகையும் கிடைக்காமல் அல்லாடினர்.

அந்த நேரத்தில் அவருக்கு பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியபோது, ஆர்யா மீது இருந்த பிக்கப் நடிகர் என்ற இமேஜினால் அவருக்கு பெண் கிடைப்பதே அரிதானது.

அதனால் மாதக்கணக்கில் பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், தன்மீது பதிந்துள்ள தவறான இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காக தற்போது ரொம்ப நல்லவராக நடந்து கொண்டு வருகிறார் ஆர்யா.

யாராவது நட்பு வட்டார நடிகர்கள், தங்களது கேர்ள் ப்ரண்டை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று ஒரு பேச்சுக்காக சொன்னால்கூட, இனிமேல் அந்த விளையாட்டெல்லாம் வேண்டாம் சாமி. ஆளை விடுங்க என்று விழுந்தடித்து ஓடுகிறாராம் ஆர்யா.