இங்கிலாந்தில்..
75 வயதான முதியவர் ஒருவர் 8முறை திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. ஒருவனுக்கு ஒரு திருமணம் செய்து கொள்வதே பெரும்பாடு…
ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த 75 வயதான ரான் ஷெப்பர்ட் என்பரை 8 முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் கடந்த 1996ம் ஆண்டு மார்கரெட் என்பவருடன் முதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் பிறந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் 1973இல் ஜீனெட் என்ற பெண்ணை திருமணம் செய்து ஒரு ஆண்டு வாழ்ந்திருக்கிறார். இப்படியே அடுத்தடுத்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அவர் இது குறித்து தெரிவித்ததாவது, தனக்கு தனியாக வாழப்பிடிக்கவில்லை எனவும் தன்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளுடன் ஜாலியாக வாழ்க்கையை நகர்த்தித் தான் வந்தேன். ஆனால் தற்போது என்னை விவகாரத்து செய்துவிட்டார்கள்.
இவர்கள் கொடுத்துள்ள விவாகரத்து தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது எனத் தெரிவிக்கிறார். இவர் இளம் வயதில் பல திருமணம் செய்து கொண்டதன் விளைவாகத்தான் தற்போது பார்கின்சன் நோய், லூயி பாடி டிமென்ஷியா, சிஓபிடி போன்ற பல நோய்களுக்கு ஆளாகியுள்ளார்.
8 பெண்களைத் திருமணம் செய்திருந்தாலும் தற்போது எல்லோரும் அவரை விட்டுச் சென்று விட்டதாகவும், பலருக்கும் நான் ஒரு உதாரணமாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அதிகமுறை திருமணம் செய்து கொண்ட நபர் இவர் தான் என அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் உள்ளது.