சென்னையில்..
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த குப்தா என்பவரின் மகன் தேஜஸ், பெரியமேடு பகுதியில் உள்ள மைலேடிஸ் நீச்சல் குளத்தில் கடந்த 10 நாட்களாக நீச்சல் பயிற்சி பெற்றுவந்தார். சிறுவனுக்கு சிலர் பயிற்சியும் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 6:30 மணி அளவில் 7 வயது நிரம்பிய சிறுவன் தேஜஸ் குப்தா நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியாளர்கள் இருவரின் மேற்பார்வையில் வழக்கம்போல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தேஜஸ் தீடீரென நீரில் மூழ்கினார். அவரை உடனிருந்தவர்கள் மீட்டு உதவி அளித்தனர்.
ஆனால் சிறுவன் மயக்க நிலையிலேயே இருந்ததால் உடனடியாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
நீச்சல் குளத்தில் இரண்டு பயிற்சியாளர்கள் உடனிருந்தும் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பெரிய மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.