கேரளாவில்..
இந்திய மாநிலம் கேரளாவில் ஓடும் ரயிலில், பயணிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு எலத்தூர் அருகே ஓடும் ரயிலில், நபர் ஒருவர் சக பயணியை தீ வைத்து எரித்தார். இதில் 8 பேர் தீக்காயம் அடைந்த நிலையில், இரண்டு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
அவர்களது உடல்கள் தண்டவாளத்தில் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தீ வைத்து எரித்த நபரான முகம்மது ஷாரூக் ஷஃபி மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரயிலில் பயணிகள் மீது வைத்தால் நல்ல காலம் பிறக்கும் என மர்ம நபர் ஒருவர் கூறியதால், அவ்வாறு செய்ததாக அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஷாரூக் தீ வைத்துவிட்டு இரண்டு பெட்டிகள் மாறி அமர்ந்திருந்துள்ளார். அதே ரயிலில் வேறு பெட்டியில் அவர் ஏறி கண்ணூர் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.