வவுனியாவில் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை!!

863

சோதனை..

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமைச்சின் உத்தரவுக்கமைய வவுனியா வர்த்தக நிலையங்களில் நிறுவை, அளவைப் பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கையை இன்று (10.04) முன்னெடுத்திருந்தனர்.



வவுனியா இலுப்பையடி, சந்தை உள்வட்ட வீதி, கண்டி வீதி, பழைய பேரூந்து நிலையம், நெளுக்குளம், பசார் வீதி ஆகிய பகுதிகளிலேயே இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக வவுனியாவில் உள்ள சதோச விற்பனை நிலையம், காகில்ஸ் பூட்சிற்றி மற்றும் தனியார் பல்பொருள் விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் என்பவற்றில் இவ் விசேட சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது நிறுத்தல் தராசுகள் முத்திரையிடப்பட்டுள்ளதா, நிறுத்தல் அளவைகள் சரியாக உள்ளனவா, பொதி செய்யப்பட்ட பொருட்களின் நிறுத்தல் அளவைகள் சரியானவையா என்பது குறித்து அதிகாரிகளினால் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.