13 வயதில் தொலைந்த வாழ்க்கையை 34ல் தேடும் பெண்ணின் அவலம்!!

548

LOVE

பிரித்தானியாவில் 13 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து வாழ்க்கையை சீரழித்த பின்பும் சட்டத்தில் இருக்கும் ஓட்டையால் நபர் ஒருவர் ஜாலியாக சுற்றி திரிகிறார்.

பிரித்தானியாவில் பெண் ஒருவர் 13 வயது சிறுமியாக இருக்கும் போது தனது தந்தையின் நண்பரால், பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார். தற்போது 34 வயதாகும் இவர் தனது வாழ்கையை அழித்த அந்த 6 மாத உறவினை பற்றி விளக்கியுள்ளார்.

இவர், தனது தந்தையின் நண்பர் வீட்டில் குழந்தையை பார்த்து கொள்ளும் காப்பாளராக பணியாற்றி வந்தபோது அந்த நபருடன் காதல் ஏற்பட்டு பாலியல் தொடர்பில் ஈடுபட்டுள்ளார்.

அவரின் தந்தைக்கு இந்த விடயம் தெரிந்த பின்னர், அவர் அடித்ததால் தந்தையை உதறிவிட்டு இந்த நபரை நம்பி தனது குடும்பத்தினரை விட்டு வந்துள்ளார்.

தற்போது இந்த நபர் இவரை ஏமாற்றி விட்டு ஸ்கொட்லாந்தில் உல்லாசமாக வாழ்கிறார்.மேலும் அவர் மீது புகார் தெரிவித்த போதும் சட்டத்தில் உள்ள ஓட்டையால் தப்பித்து வருகிறார்.

சட்டப்படி 2004ம் ஆண்டுக்கு முன் 16 வயதுக்குட்பட்டோர் பாலியல் கொடுமைக்கு ஆளானால்,அவர் கொடுக்கும் புகார் செல்லுபடியாகாது.

தற்போது அந்த நபரோ சந்தோஷமாக வாழ்க்கையை கழித்து வருகிறார். ஆனால் இந்த பெண்ணோ தனது வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்.