மணமேடையில் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்ட மணப்பெண்.. வீடியோ வைரலானதால் தலைமறைவு!!

538

உத்தர பிரதேசத்தில்..

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மணமேடையில் மணப்பெண் துப்பாக்கியை மேல் நோக்கி சுட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.



திருமண நிகழ்வில் துப்பாக்கியை பயன்படுத்திய மணமகள்
உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் சலீம்பூரில் திருமண நிகழ்ச்சி நடந்தது.

அப்போது மணமக்கள் ஜோடியாக அமர வைக்கப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அப்போது திருமணத்திற்கு வந்த நபர் மணமகளின் கையில் கைத்துப்பாக்கி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதனை வாங்கிய மணமகள் மேல்நோக்கி நான்கு முறை சுட்டுள்ளார். அச்சமயம் மணமகன் எதுவும் தெரியாதது போல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து அறிந்த பொலிஸார் மணமகள் மீதும், துப்பாக்கியை கொடுத்த நபர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

பொலிஸார் அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மணமகள் தலைமறைவானதால் மணமகன் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.