ஒரு வாரத்தில் கோச்சடையான் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை!!

503

Kochadayan

ரஜினியின் கோச்சடையான் படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கோச்சடையான் படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசானது.

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஆறு மொழிகளில் வந்தது. 3 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. வெளிநாடுகளில் ஒருநாள் முன்னதாகவே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. சிறப்பு காட்சிகளால் மட்டுமே 5 கோடி வரை வசூல் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ரிலீசானதும் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின.

மூன்று நாட்களில் 42 கோடி வசூல் ஈட்டியது. இதுகுறித்து சோச்சடையான் படத்தை தயாரித்த ஈராஸ் இண்டர்நேஷனல் ஊடக நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் நந்து அகஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் கடந்த 23ம் திகதி உலகம் முழுவதும் 3 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இரட்டை பரிமாணம் மற்றும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் 6 மொழிகளில் வெளியானது.

ரஜினி ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் வசூல் குவித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் இந்தியாவில் 30 கோடியும் வெளிநாடுகளில் 12 கோடியும் வசூல் ஈட்டியுள்ளது. வார இறுதியில் கோச்சைடையான் பட முன்பதிவுக்கு கடும் போட்டி இருந்தது.

தமிழ்நாட்டில் ரஜினிக்கு உள்ள செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் படம் பார்ப்பதற்கு முதல் நாள் இரவே தியேட்டருக்கு வந்து ரசிகர்கள் காத்து இருந்தனர். இதனால் காலை 5 மணிக்கே படம் திரையிடப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சென்னையில் மட்டும் மூன்று நாட்களில் 4.16 கோடி வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. கோச்சடையான் வெளியாகி இன்றுடன் 6 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

எனவே வசூல் 50 கோடியை தாண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. தியேட்டர்கள் வசூலை தவிர்த்து 6 மொழிகளில் இப்படத்தின் டி.வி. சேட்டிலைட் உரிமைகள் விற்கப்பட்டு உள்ளது. மொபைல் போன்களுடனும் ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. ‘ரிங்டோன்’ வசூலும் வருகிறது.

இப்படி அனைத்து வகையிலும் வந்த மொத்த உருவாய் 100 கோடி இருக்கும் என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது தமிழ் திரையுலகின் புதிய சாதனையாக கருதப்படுகிறது.