பரீட்சைக்கு பயந்து 10ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு.. கதறும் குடும்பம்!!

1452

சென்னையில்..

சென்னை மணலி அடுத்துள்ள ஹரி கிருஷ்ணபுரத்தில் ரவிசங்கர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரவி சங்கர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ராஜஸ்ரீ (வயது 15) மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் மாணவி கணித தேர்வுக்கு தயாராகி வந்தார். வீட்டில் இருந்து படித்துவந்த அவருக்கு பெற்றோர் உதவினர். இந்த நிலையில் தொடர்ந்து படிக்குமாறு மாணவி ராஜஸ்ரீ யிடம் கூறிவிட்டு பெற்றோர் வெளியில் சென்று விட்டனர்.

கணித பாடம் சரியாக ராஜஸ்ரீக்கு வராததால் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொண்டார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது வீட்டில் தீபிடித்து எரிவதும், சிறுமி அலறுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் சிறுமியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கனித தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.