வவுனியாவில் வீதியில் சென்ற தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த விபரீதம் : நகைகளும் அபகரிப்பு!!

3245

பம்பைமடு பகுதியில்..

வவுனியா, பம்பைமடு பகுதியில் வீதியில் சென்ற தாய் மற்றும் மகள் மீது வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.ல் ந.ட.த்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம் என்பனவும் கொ.ள்.ளை.யி.ட.ப்.ப.ட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் நேற்று (15.04) தெரிவித்தனர்.



இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் வசிக்கும் தாயும், எட்டு மாத கர்ப்பிணியான அவரது மகளும் புத்தாண்டு தினத்தன்று (14.04) மோட்டர் சைக்கிளில் வவுனியா நகரில் இருந்து பூவரசன்குளம் நோக்கி சென்றுள்ளனர்.

இரவு 8.30 மணியளவில் பம்பைமடு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அப் பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக் கழகத்திற்கும், பம்பைமடு இராணுவ முகாமிற்கும் இடைப்பட்ட சிறிய பற்றைக் காட்டுக்குள் இருந்து,

முகத்தினை துணியினால் மூ.டி க.ட்டியவாறு வந்த மூவர் குறித்த மோட்டார் சைக்கிளை வ.ழிமறித்து அவர்கள் மீ.து வா.ளா.ல் வெ.ட்.டி தா.க்.கு.த.ல் ந.ட.த்.தி.யு.ள்.ள.ன.ர். அத்துடன், அவர்கள் அணிந்திருந்த சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 6 அரைப் பவுண் நகைகளை கொ.ள்.ளை.ய.டி.த்.து.ள்.ள.து.ட.ன்,

அவர்களது பையில் இருந்த ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தொலைபேசிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் 8 மாத கர்ப்பிணி பெண் ஆகிய இருவரும்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.