கணவன், மனைவி மீது சீமெந்து கலவையை ஊற்றி அடாவடி.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!!

663

கரூரில்..

கரூர் மாநகராட்சி ஜெஜெ நகர் குடியிருப்புப் பகுதியில், சாக்கடை கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஜெஜெ நகர் குடியிருப்பு பகுதியில் கோமதி என்பவரின் வீட்டை ஒட்டி சாக்கடை கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டி இருக்கிறார்கள்.



இதனால் அந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவர் விரிசல் விட்டுள்ளது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் ஒப்பந்ததாரரிடமும், நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அந்த வீட்டின் படுக்கை அறை சமையல் அறை, ஹால் உள்ளிட்ட இடங்களில் இரும்பு ஜாக்கியை கொண்டு முட்டு கொடுத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சாக்கடைக்கும், அவர்களது பக்கவாட்டு சுவருக்கும் உள்ள இடைவெளியில் காங்கிரிட் போட வேண்டும் என்றால் 43 ஆயிரம் கொடுத்தால் தான் போடுவோம் என ஒப்பந்ததாரர் வீட்டின் உரிமையாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்தும் வீட்டின் உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். எனினும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எனினும் குடியிருப்புகளில் பள்ளம் தோண்டப்பட்டும், கம்பிகள் கட்டப்பட்டும் பணிகள் அப்படியே கிடந்ததால் மக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் மக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் கான்கிரீட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

பாதிக்கப்பட்டவர் வீட்டின் முன்பு பணம் கொடுக்காமல் கான்கிரீட் அமைக்க முடியாது என்று ஒப்பந்ததாரர் கூறியிருக்கிறார். இடிந்த வீட்டின் சுவரை கட்ட தம்பதியிடம் ரூ.43,000 நிதி கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வீட்டின் உரிமையாளர்களான பாலச்சந்தர் மற்றும் கோமதி தம்பதிகள் இருவரும் கழிவுநீர் வடிகால் குழியில் இறங்கி போராடினார்கள். அதனை பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர் அவர்கள் மீது கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் தம்பதிக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டது. இதனிடையே கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது ஒப்பந்ததாரர் கான்கிரீட் கலவையைக் கொட்டும் வீடியோ வெளியானதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்தனர்.