தனது உடல் வியர்வையை வாசனை திரவியமாக மாற்றி விற்பனை செய்யும் மொடல் அழகி!!

485

பிரேசில்லில்..

பிரேசில் மொடல் ஒருவர் தனது வியர்வைத் துளிகள் அடங்கிய வாசனை திரவியத்தை ஒன்லைனில் விற்பனை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது ஆண்களை ஈர்க்கிறது மற்றும் “கவர்ச்சியாக” மணக்கிறது என்று அவர் கூறுகிறார்.



பிரேசில் நாட்டைச் சேர்ந்த 29 வயதான மொடல் மற்றும் ஒன்லைன் செல்வாக்கு பெற்ற வனேசா மௌரா (Wanessa Moura), தனது புதிய வாசனை திரவியத்தின் காரணமாக அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார். அதில் அவரது உடல் வியர்வை ஒரு மூலப்பொருளாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

சாவோ பாவ்லோவைச் சேர்ந்த வனேசா மௌரா, தற்போதைய காதலன் மற்றும் முன்னாள் துணை இருவரும் தனது இயற்கையான உடல் வாசனையை ‘கவர்ச்சியான மற்றும் உற்சாகமானவை’ என்று பாராட்டியதாகவும், இதுவே, தனது வியர்வையைப் பயன்படுத்தி பிரத்யேக வாசனை திரவியத்தை உருவாக்க தூண்டுதலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த வியர்வை கலந்த வாசனை திரவியத்திற்கு அவர் ‘Fresh Goddess’ என்று பெயர் வைத்துள்ளார். ஒவ்வொரு வாசனை திரவிய போத்தலிலும் அவரது உடலிலிருந்து சேகரிக்கப்பட்ட 8 மில்லி லிட்டர் வியர்வை இருப்பதாக கூறுகிறார்.

இது டேட்டிங் செய்வதற்கும் நீங்கள் விரும்பும் ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதற்கும் சிறந்த நறுமணமாக அமையம் என்று அவர் கூறுகிறார். Fresh Goddess வாசனை திரவியத்தின் காரணமாக இரண்டாவது முறையாக டேட்டிங் செய்ய அழைக்கப்பட்டதாக, அவரைப் பின்தொடரும் நபர் ஒருவர், இந்த வாசனை திரவியத்தின் ஈர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தியதாக வனேசா மௌரா கூறுகிறார்.

“எனது இயற்கையான வாசனை ஆண்களை கவர்ந்திழுக்கிறது, அதனால் நான் என் வியர்வையின் துளிகளை வாசனை திரவியத்தின் நறுமணத்திற்கு அடித்தளமாக பயன்படுத்தினேன்,” என்று மௌரா மேலும் கூறினார்.

“எனது வாசனை திரவியமாக மாறிய இந்த காதல் மற்றும் பாலியல் பானத்திற்கான சூத்திரத்தில் எனது வியர்வை மிக முக்கியமான மூலப்பொருள். டேட்டிங் செய்வதற்கும், உங்கள் துணையுடன் இனிமையான அனுபவங்களை அனுபவிப்பதற்கும் அல்லது நீங்கள் விரும்புபவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது சிறந்த வாசனை திரவியமாகும்” என்று அவர் விளம்பரப்படுத்திக்கொள்கிறார்.

மௌரா தனது வியர்வை கலந்த வாசனை திரவியம் ஒரு சக்திவாய்ந்த பாலுணர்வை ஏற்படுத்தும் என்றும், 50மிலி போத்தலுக்கு 138 டொலர் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 45,000 ரூபா) என்ற விலையில் விற்கிறார்.