இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி!!

460

ENG

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 24 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் எவரும் பிரகாசிக்காத நிலையில் இங்கிலாந்து அணியின் ஜோர்தான் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 12.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

இதன் மூலம் இலங்கை அணி தனது மூன்றாவது மிகக் குறைந்த ஓட்டங்களை நேற்றைய போட்டியில் பதிவு செய்தது.