சூனியக்காரர்கள் என நினைத்து அப்பாவி தம்பதிகள் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

523

Murder

சூனியக்காரர்கள் என்ற சந்தேகத்தில் வயது முதிர்ந்த தம்பதியரை 3 பெண்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் அங்லா கிராமத்தில் சேர்ந்த 62வயதாகும் பார்த்திக் குஜுர், மனைவி அல்வேஷியாவுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த தம்பதியர் பில்லி, சூனியம், ஏவல் போன்ற மந்திர வேலைகளை செய்து வருவதாகவும், இதனால் அங்குள்ளவர்கள் புதுப்புது நோய்களுக்கு ஆளாவதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் சந்தேகித்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் பார்த்திக் குஜுரின் வீட்டுக்கு சென்ற சிலர் அவரையும், அவரது மனைவியையும் அடித்தே கொன்றுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த ஜஷ்பூர் மாவட்ட பொலிசார், கொலையில் சம்பந்தப்பட்ட அஞ்சனா டிர்க்கி, சோஷன் டிர்க்கி, கருணா டிர்க்கி ஆகிய மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.