கூகுளை கலக்கிய டோனி, மேக்ஸ்வெல்!!

445

Dhoni

ஐ.பி.எல் 7வது தொடரில் இணையத் தேடலில் அதிகம் தேடப்பட்ட வீரர்களாக டோனி, மேக்ஸ்வெல் திகழ்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக உள்ள டோனிக்கு ரசிகர்கள் எப்போது அதிகம். அதே நேரத்தில் இந்த ஐ.பி.எல் தொடரில் மேக்ஸ்வெல் ரசிகர்களின் அதிரடி ஹீரோவாக உள்ளார்.

இந்தக் காரணங்களால் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட வீரர்களாக இவர்கள் விளங்குகின்றனர். டோனி, மேக்ஸ்வெல் தவிர அதிகம் தேடப்பட்ட வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங், டிவிலியர்ஸ், கம்பீர், ரோகித் ஷர்மா, டேல் ஸ்டெய்ன், ரொபின் உத்தப்பா, ரவீந்தர் ஜடேஜா, யூசுப் பத்தான் ஆகியோர் உள்ளனர்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இது தவிர, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகம் தேடப்பட்டுள்ளன.