
நடிகை ஸ்ருதி ஹாசனும், கிரிக்கெட் வீரர் ரெய்னாவும் காதலிப்பதாக பொலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி என கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் முதலில் நடிகர் சித்தார்த்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.
ஆனால் கடந்த 2011ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தற்போது கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் இணைத்து பேசப்படுகிறார்.
ஸ்ருதியும் ரெய்னாவும் நண்பர் ஒருவர் மூலமாக அறிமுகமானார்கள். அன்றுமுதல் இருவரும் நெருக்கமான நட்பில் இருக்கின்றனர். இருவரும் பிஸியாக இருந்தபோதும் தனிமையில் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்குகிறார்கள்.
இது பற்றி இருவரிடமும் கருத்து கேட்க முயன்றபோது இருவரையும் தொடர்புகொள்ள இயலவில்லை என்று பொலிவுட் பத்திரிகை ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.





