யாழில் மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 40 பேர் கைது!!

550

A11

யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைவிரித்தாடும் அடிதடி, வாள்வெட்டு, கோஸ்ரி மோதல் சம்பவங்களை அடுத்து இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்ட 40 பேர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எம்.திலகரட்ண தெரிவித்துள்ளார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்து கொண்டு, கடந்த வாரத்தில் யாழில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் பொலிஸாருடைய கைது நடவடிக்கை தொடர்பான புள்ளிவிபரங்களை தெரிவித்திருந்தார்.

இப்புள்ளிவிபரங்களில் அடிப்படையிலேயே மேற்படித் தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார். இதன்படி அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ். பிராந்தியம் மற்றும் காங்கேசன்துறைப் பிராந்தியத்திதற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலைங்களில் ஊடாகவும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தி பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுதிக் கொள்ளும் விசேட ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்.பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஏறத்தாள அரைவாசித் தொகையினராக 40 பேர் வாள்வெட்டு, கோஸ்டி மோதல், அடிதடி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதேபோன்று காங்கேசன்துறைப் பிரிவின் கீழ் உள்ள பொலிஸ் நிலைங்களில் ஊடாக 96 பேர் உட்பட மொத்தமாக யாழ்.மாவட்த்தில் 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்செய்யப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் தற்போது வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபடுதல் மற்றும் பகல் கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் யாழில் 7 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலைங்களில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 15 இலட்சத்தி 55 ஆயிரத்து 850 ரூபா பெறுமதியான தங்க நகைகள், பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்படிச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுடைய தகவல்கள் குறித்த முறைப்பாடுகளில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எவரையும் இதுவரையில் கைது செய்யவில்லை. புலனாய்வு ரீதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் கைது செய்து கொள்ளையிடப்பட்ட பொருட்களும் மீட்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.