
பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் படங்களை அடுத்து விஷால் நடித்து வரும் படம் பூஜை. தாமிரபரணி படத்தையடுத்து ஹரி-விஷால் இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
முதன்முறையாக விஷால்-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ள இப்படம் கோவையை மையமாகக்கொண்ட கதையில் உருவாவதால், இதன் பெரும்பகுதி படப்பிடிப்பும் கோவை ஏரியாவிலேயே நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று காலை ஆனைமலை-உடுமலை சாலையில் படப்பிடிப்பு நடத்தினார்களாம். அந்த போக்குவரத்து மிகுதியான பகுதியில், அம்புலன்ஸ் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வாகனங்கள் செல்லகூட முடியாமல் படக்குழுவினர் சாலையை அடைத்து படப்பிடிப்பு நடத்தினார்களாம்.
இதனால், பொதுமக்களுக்கு படப்பிடிப்பு குழுவினர் சிரமம் கொடுத்து வருவதாக அந்த பகுதியினர் பொலிசில் புகார் அளித்தார்களாம்.
அதையடுதது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து பொலிசார், அந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த பூஜை படக்குழுவினர் முறையான அனுமதியே பெறவில்லை என்று கூறி, 2500 தொகையை ஸ்பாட் அபராதமாக வாங்கினார்களாம்.
இதனால் சிறிது நேரம் யூனிட்டுக்கும், பொலிசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சுமார் ஒரு மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் அதே பகுதியில் தொடரப்பட்டதாம். பின்னர், பொலிசாரே படப்பிடிப்புக்கு பாதுகாப்பும் வழங்கினார்களாம்.





