வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்!!

1036

Va

வவுனியா நகரை அண்டிய பிரபல கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவன், அக்கல்லூரியின் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். கடந்த 27ம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் அலகுப் பரீட்சையில் புள்ளிகள் குறைவடைந்தமையால் ஆசிரியர் தாக்கியுள்ளார். எனினும், மாணவன் தொடர்ந்து பாடசாலையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக வெளியில் சொல்ல மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அக்கல்லூரியின் ஒரு சில ஆசிரியர்களின் உதவியால் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

எனவே இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட சிறுவர் நன்னடத்தை உரிய அதிகாரிகள் விசாரணையை தொடங்க வேண்டும் என குறித்த ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.