மட்டக்களப்பில் மாவை எம்.பி.மயங்கி வீழ்ந்ததால் பரபரப்பு!!

646

M1 M2 M3

மட்டக்களப்பு, கல்லடி துளசி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற “அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் – ஒரு சமகால பார்வை” எனும் கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மயங்கி விழுந்து விட்டார்.

சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சம்பங்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாக உரையாற்றிக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி சரிந்து வீழ்ந்த நிலைமையானது அங்கு கூடியிருந்த பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தின் பின்னர் அவர் பழைய நிலைக்கு திரும்பிய பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் பதற்றம் நீங்கியது.