வவுனியா வெடுக்குநாறி ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் விஜயம்!!

881

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலமையிலான குழுவினர் இன்று (06.05.2023) விஜயம் செய்துள்ளனர்.

வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.



இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலமையிலான குழுவினர் விஜயம் செய்து வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தையும், அதன் சூழவுள்ள பகுதிகளையும் பார்வையிட்டுள்ளனர். இதன்போது, நெடுங்கேணி பொலிசார் மற்றும் சிங்கள மக்களும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.