தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்.. காலநிலை தொடர்பான அவசர அறிவிப்பு!!

1464

வங்காள விரிகுடாவில்..

தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை சுற்றி கொந்தளிப்பு நிலை உருவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த கடல் கொந்தளிப்பு நிலை அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் சூறாவளியாக மாறும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, 5 – 10 வடக்கு அட்சரேகைகள், 90 – 100 கிழக்கு தீர்க்கரேகைகள் மற்றும் 1 – 4 வடக்கு அட்சரேகைகள், 85 – 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களுக்கு பயணிக்க வேண்டாம் என மீனவ மற்றும் கடற் படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை உடனடியாக நிலம் அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.