அதிகரிக்கப்படவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்… ஜனாதிபதியின் தீர்மானம் வெளியானது!!

1480

அரச ஊழியர்களின் சம்பளம்..

இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நாம் தற்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் அரசாங்க ஊழியர்களுக்கு இறுதி காலாண்டில் சம்பள உயர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

அதனால்தான் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசாங்கம் எதிர்ப்பார்க்கும் இலக்கை எட்ட முடியுமானால் அரச ஊழியர்களுக்கும் அதன் நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.