சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகளுக்கு கொடுப்பனவு!!

477

Jail

நீண்ட காலமாக சிறைகளில் தண்டனை அனுபவித்து விடுதலையாகும் கைதிகளுக்கு 50,000 ரூபா கொடுப்பனவு ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்தக் கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளது. சிறைச்சாலை பயிற்சிகளை பூர்த்தி செய்து நன்னடத்தையுடன் செயற்படும் நபர்களுக்கு இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படும்.

இந்த ஆண்டில் ஆயிரம் கைதிகளுக்கு இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. இதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைதிகள் இந்தப் பணத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்பது குறித்து கண்காணிக்கப்படும். கைதிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகள் பணக் கஸ்டம் காரணமாக மீண்டும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.