வவுனியாவில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கப்பட்டது!!

1292

வவுனியாவில் முள்ளிவாய்கால் கஞ்சி நேற்று (11.05.2023) வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் குறித்த கஞ்சி வழங்கப்பட்டது.



இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்காலில் அகப்பட்ட மக்களின் பசியைப் போக்க கஞ்சி வழங்கப்பட்டது. அரிசி மற்றும் நீர் என்பவற்றில் செய்யப்பட்ட இக் கஞ்சி முள்ளிவாய்கால் நினைவேந்தலை முன்னிட்டு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.