வவுனியாவில் விதிமுறைகளை மீறி ஆடுகளை ஏற்றிச்சென்ற சந்தேக நபர் கைது : 54 ஆடுகள் மீட்பு!!

983

வவுனியாவில் விதிமுறைகளை மீறி ஆடுகளை 54 ஆடுகளை கூலர் ரக வாகனத்தில் ஏற்றிச்சென்ற சந்தேக நபரை பொலிஸார் நேற்றிரவு (11.05.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கல்கிசைக்கு விதிமுறைகளை மீறி ஆடுகள் ஏற்றிச்செல்வதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பதில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலமையிலான குழுவினர் தாண்டிக்குளம் பகுதியில் குறித்த வாகனத்தினை மறித்து சோதனைக்குட்படுத்தினர்.



இதன் போது விதிமுறைகளை மீறி 54 ஆடுகள் குறித்த கூலர் ரக வாகனத்தில் இருந்தமை உறுதி செய்யப்பட்டமையினையடுத்து குறித்த வாகனத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றமையுடன் வாகனத்தின் சாரதியான 42வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்து விளக்கமறியளலில் வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.