வவுனியாவில் இளம் குடும்ப பெண் உள்ளிட்ட இருவரின் சடலங்கள் மீட்பு!!

5437

வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியில் இளம் குடும்பப் பெண் உள்ளிட்ட இருவரின் சடலங்கள் இன்று (13.05) காலை மீட்கப்பட்டுள்ளதாக பறையனாலங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கிராம மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த இரு சடலங்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம் குடும்ப பெண் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



குறித்த வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் வாசல் பகுதியில் இடியன் துப்பாக்கி சூட்டு காயத்துடன் இளைஞர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் இடியன் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்பட்டுள்ளது.

சம்பவத்தில் நீலியாமோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது பிள்ளை ஒன்றின் தாயாரான நியூட்டன் தர்சினி (வயது 26), சிவபாலன் சுஜாந்தன் (வயது 24) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பறையானாலங்குளம் பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.