தமிழகத்தில் விபரீத விளையாட்டால் உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்!!

1138

தமிழகத்தில்..

தமிழகத்தில் 3 இலங்கைதமிழ் இளைஞர்கள் வீதியில் வீடியோ எடுத்துகொண்டே சென்று விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் குறித்த இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் தாங்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடி சென்றபோது அவர்களுக்கு முன்னே சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்பொழுது அந்த லாரியில் மோதி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த மூவரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

சம்பவத்தில் 19 வயதே ஆன தயாளன் , சார்லஸ் 21 வயது, ஜான் 20 வயது ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணையையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை உயிர் காக்கவென நாட்டைவிட்டு வெளியேறி காணொளி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.