சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வவுனியா பிரதேசசெயலகமும் வாழ்வின் எழுச்சி திணைக்களமும் இணைந்த எற்பாட்டில் வவுனியா பிரதேசத்துக்குட்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கொன்றை நேற்று (02.06) நடாத்தியிருந்தனர் .
வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் தலைமைபீட முகாமையாளர் திருமதி சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இன்நிகழ்வில் பிரதேசசெயலாளர் க.உதயராசா, சமுர்த்தி உதவி ஆணையாளர் பி.எம்.கே.வீரசிங்க, சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் திரு.எஸ்.வில்வராசா, சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எஸ்.பாலசேகர், வவுனியா மதுவரிதிணைக்களத்தின் தலமை அதிகாரி மற்றும் கிராமமட்ட சங்கங்களின் தலைவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.






