பாக்கு நீரிணையை கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்திய இலங்கைத் தமிழ் மாணவன்!!

1369

மதுஷிகன்..

இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்தி இலங்கைத் தமிழ் மாணவர் ஒருவர் புதிய உலக சாதனையை நேற்று 28ஆம் திகதி நிகழ்த்தியுள்ளார்.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மாணவரான தேவேந்திரன் மதுஷிகன் ஜனாதிபதி சாரணரும் ஆவார்.

பாக்கு நீரிணை வழியாக 30 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி நேரத்தில் நீந்தி பள்ளி மாணவன் என்ற வகையில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

தனுஸ்கோடியில் இருந்து அதிகாலையில் ஒரு மணிக்கு நீந்தத் தொடங்கிய மாணவன் பிற்பகல் 3-05 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.

இந்நிகழ்வில் மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாகாணங்களின் ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.