
பிபில, வெத்தாபெதிஇன்ன, பிடகுபுர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவன் செய்த முறைப்பாட்டின் படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கள்ளத் தொடர்பின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கக் கூடும் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத அதேவேளை பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





