தாய் வெளிநாட்டில் : மகளுக்கு நேர்ந்த கொடூரம் : தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

1699

பலப்பிட்டியவில்..

பலப்பிட்டிய பிரதேசத்தில் தனது 11 வயது மகளை கடுமையாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



அத்துடன் 6 இலட்சம் ரூபாய் நட்டஈடு மற்றும் 80 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான தந்தை 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார் என உரகஸ்மஹந்திய பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, ​​தனது தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்வதாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அந்த குற்றச்சாட்டின் பேரில் தந்தையை சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், உரிய தண்டனைகளையும் விதித்துள்ளது.