வவுனியா மூன்று முறிப்பில் பேருந்து விபத்து : பயணிகள் மூவர் படுகாயம்!!(படங்கள்)

1220

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இன்று (05.06) காலை 11.40 மணியளவில் கொழும்பு – வவுனியா பேருந்துடன் பட்டா வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியத்தில் பயணிகள் மூவர் படுகாயமடைந்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் பூனாவ பிரதேசத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சில பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ் விபத்தில் பட்டா வாகனம் முழுமையாக சேதமடைந்ததுடன் பேரூந்து பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

-நன்றி சுரேந்திரன்-

12 13 14 15 16