மணமகனை மரத்தில் கட்டி வைத்து அடித்த பெண் வீட்டார்.. அதிர்ச்சி சம்பவம்!!

1462

உத்திரபிரதேசத்தில்..

ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணம் செய் என்பது பழமொழி. கல்யாணத்தை பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள் , முந்தைய தலைமுறை வரை பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தனர். தற்போது நிலைமை மாறிவிட்டது.

வரதட்சிணைகள் குறைந்து வரும் இந்த காலத்தில் சில இடங்களில் விபரீதங்களும் நிகழ்ந்து விடுகின்றன. அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்றில் வரதட்சணை கேட்டதால் மணமகனை மரத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அமர்ஜித் வர்மா என்பவருக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டு தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

திருமண விழாவில் மாலை மாற்றிக்கொள்ளும் ஜெய் மாலா என்ற சடங்கின்போது, அமர்ஜித்தின் நண்பர்கள் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மணமகன் – மணமகளின் குடும்பத்தினருக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

அப்போது மணமகன் அமர்ஜித் வர்மா, மணமகளின் குடும்பத்தினரிடம் வரதட்சணைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இரு வீட்டாரும் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், தங்களிடம் வரதட்சணைக் கேட்ட மணமகனைச் சிறைப்பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மந்தடா காவல் நிலைய போலீசார், மணமகனை விடுவித்து அவரைக் கைது செய்தனர்.

இது குறித்து எஸ்எச்ஓ மந்தாதா கூறுகையில், “இரு தரப்பும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை சமரசம் ஏற்படவில்லை” எனறார். மேலும், “மாப்பிள்ளையின் நண்பர்கள் தவறாக நடந்து கொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், மணமகன் அமர்ஜித் வரதட்சணை கேட்டு கோரிக்கை வைத்தார். திருமண விழா ஏற்பாடுகளில் பெண்ணின் தரப்பு செலவுகளை ஈடுசெய்வதற்கும், ஒரு சமரசத்தை எட்டுவதற்கும் இரு குடும்பங்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்து கொண்டிருந்தது” என்று தெரிவித்தார்.