விருதுநகரில்..

விருந்துநகர் மாவட்டத்தில் கணவரிறந்த துக்கம் தாங்காமல், தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் இனி என்னாகும் என்கிற மன அழுத்தத்தில், 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரையடுத்துள்ள கோட்டையூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பாண்டீஸ்வரி (35). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன். ஈஸ்வரனுக்கு கடந்த சில மாதங்களாக உடம்பில் உப்புச்சத்து அதிகம் இருந்து வந்துள்ளது.

இதனால் கடந்த ஒரு மாத காலமாக கடுமையாக் அவதிப்பட்டு வந்த நிலையில், மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். கணவன் உயிரிழந்ததும் மனைவி பாண்டீஸ்வரி, மிகுந்த மனக்குழப்பத்தில் ஆழ்ந்தார். எப்படி 3 குழந்தைகளை வளர்ப்பது .

செலவுக்கு என்ன செய்வது , வருமானம் எதுவும் இல்லாத நிலையில் 3 குழந்தைகளுடன் ஈஸ்வரனுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் சடலங்கள் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் மனைவி பாண்டிஸ்வரி, மகள்கள் வைத்தீஸ்வரி, காளீஸ்வரி, மகன் விக்னேஸ்வரன் ஆகிய 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





