மறுபிறவி எடுத்த சிறுவன் அம்மாவை மகள் எனவும், பாட்டியை மனைவி என அழைக்கும் ஆச்சர்யம்!!

1828

உத்தரபிரதேசத்தில்..

திரைப்படங்களில் மறுபிறவி கதைகளை சுவாரஸ்யமாக ரசிப்பவர்கள் கூட நிஜத்தில் இதெல்லாம் வெறும் கட்டுக்கதை வேலையப் பார் என்போம். ஆனால் பலர் நிஜ வாழ்க்கையிலும் இதை நம்புகிறார்கள்.

சில உண்மையும் கூட என்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரில் வசித்து வரும் மனோஜ் மிஸ்ரா ஜனவரி 9, 2015 அன்று தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, பாம்பு கடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிரிழந்தார்.

அப்போது அவருடைய மகள் ரஞ்சனா கர்ப்பமாக இருந்தார். மனோஜ் மிஸ்ரா இறந்து 20 நாட்களுக்குப் பிறகு ரஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆர்யன் என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆர்யன் தனது 4 வயதில் தனது தாயிடம் நீ என் தாய் அல்ல என கூறிவந்தார். விளையாட்டாக சிறுபையன் கூறுகிறான் என நினைத்து விட்டுவிட்டனர். கடைசியாக மைன்புரிக்கு வந்ததும் பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டு உள்ளார்.

அவரது தாய் பாட்டியின் பாதங்களை தொட்டு வணங்குமாறு கூறியுள்ளார். கோபமடைந்த சிறுவன் அவர் என் மனைவி, என் பாட்டி அல்ல எனக் கூறினார். அம்மாவை மகள் என்றும், அண்ணனை மகன் என்றும் அழைத்தார்.

அவர் தன்னை 8 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்த மனோஜ் மிஸ்ரா என அறிமுகப்படுத்திக் கொண்டார். தாத்தாவின் மறு அவதாரம் என்று கூறுகிறான். அக்கம்பக்கத்தினர் அவனை தாத்தா பற்றி நிறைய கேள்விகளைக் கேட்கிறார்கள்.

சிறுவன் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளிக்கிறான். குறிப்பாக தனது தாத்தாவின் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து ஆர்யன் கூறியது தான் ஹைலைட்.